காட்டன் உள்ளாடைகளின் தொகுப்பு !

சௌகர்யம், ஆதாரம் மற்றும் ஸ்டைல்! எந்தவகை உள்ளாடைகளையும் தெரிவுசெய்யும் வேளையில் இந்த மூன்று அம்சங்களையும் கருத்திற்கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும். சரியான உள்ளாடையென்பது, நீங்கள் அணிந்திருப்பதே தெரியாதவண்ணம் இருப்பனவாகும். காட்டன் உள்ளாடைகள், உங்கள் அலுமாரியில் இருக்க வேண்டிய உங்கள் நாளாந்த பாவனைக்கு அவசியமான உள்ளாடையாகும். அதிகளவு அனுகூலங்களை அளிக்கும் காரணத்தினால், பருத்தி உள்ளாடைகளை அநேகமான பெண்கள் தெரிவுசெய்வதில் வியப்பேதும் இல்லை. காட்டன் ப்ரா மற்றும் பேண்டீகள் சௌகர்யத்தின் உச்சத்தினையும், ஆதரவினையும் அளிப்பதுடன், நேர்த்தியான வெளிப்புறத் தோற்றத்தினையும் தரும்

பருத்தியின் அனுகூலங்கள் 

மென்மையானது – நெகிழ்வுத்தன்மையும், மென்மையும் நிறைந்த துணியினால் உருவாக்கப்படுவதால், உடலுடன் இயல்பாக இயைந்துகொள்கின்றது.

ஒவ்வாமைகளை எதிர்க்கும் - பருத்தி துணியிலுள்ள சேர்க்கையானது, ஒவ்வாமைத்தன்மை அற்றதனால், ஏதாயினும் ஒவ்வாமைகள் ஏற்படும் என்ற கவலையை கொண்டிருக்க தேவையில்லை

ஈரப்பதன் கட்டுப்பாடு – பருத்தியானது, காற்று உட்புகக்கூடிய துணியாகும் என்பதுடன், சருமத்திலுள்ள ஈரப்பதத்தினை உறிஞ்சக்கூடியது என்பதால், வெப்பமண்டல காலநிலைகளில் அல்லது உடற்பயிற்சியின் போது வெளிப்படும் ஈரலிப்பையும் உள்ளீர்த்துக்கொள்ளும்

காத்தல் /காப்புக்கவசம் - பருத்தியானது, சருமத்திலிருந்து துணியை அகற்றிப்பிடிப்பதனால், மேனியினை காற்றோட்டமாக பேணுவதுடன், வெப்பத்திலிருந்தும் உடலை காக்கின்றது.

நீடித்த பாவனை – பருத்தி துர்மணங்களை குறைந்தளவில் உள்ளீர்ப்பதுடன், இவற்றை பேணுவதற்கு குறைந்தளவு பராமரிப்பே போதுமானது. அதியுயர் பருத்தியாடை கலப்பு கொண்ட துணிகளுக்கு குறிப்பிடும்படியான கழுவுதல் முறைகளை பின்பற்ற வேண்டியதில்லை

சௌகர்யம் - இந்த துணியின் மென்மைத்தன்மை காரணமாக, ஓய்வுவேளைகளிலும், நாளாந்த பாவனைக்கும் உகந்ததாகும்

amanté  காட்டன் தொகுப்பு

பருத்தி துணியின் ஏராளமான அனுகூலங்களுடன், amanté இன் விசாலமான காட்டன் தயாரிப்புகள், நவநாகரீகம் சௌகர்யம் மற்றும் ஆதரவினை உடலுக்கு அளிக்கின்றது. இந்த காட்டன் தொகுப்பில் ப்ரா மற்றும் பேண்டீ வகைகள் உள்ளடங்குகின்றன


ப்ரா'க்கள்

amanté காட்டன் ப்ராக்கள் தையலற்ற நுட்பமிகு வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளன. நேர்த்தியான அதன் கப்'களானது, வேறு அலங்காரச் சேர்க்கைகளை இணைக்காது கிடைப்பதனால், எந்த ஆடை அணிந்தாலும், கண்ணுக்கு புலப்படாத உணர்வினை அளிக்கின்றது. amanté காட்டன் ப்ரா'க்கள் டீ-ஷேர்ட் ப்ரா வகையிலும் கிடைக்கின்றன. இவை நாளாந்த பாவனைக்கு (வேலை மற்றும் ஓய்வு) உகந்தவை. இந்த காட்டன் ப்ரா'க்கள், பல்வேறு உடலமைப்பைக் கொண்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த silhouette வயர் மற்றும் படேட் செய்யப்பட்ட பிராக்கள் மற்றும் வயர் மற்றும் படேட் செய்யப்படாத பிராக்கள் வகையில் கிடைக்கின்றன. இந்த பருத்தி உள்ளாடைகள் க்ளாசிக் வகையான அத்தியாவசிய வர்ணங்களான வெண்மை, உடல் நிறம், கருமை வர்ணங்கள் மற்றும்  சிவப்பு, கோரல் பிங்க், நீலம் மற்றும் பல்வகை ப்ரின்ட்களில் கிடைக்கின்றன. amanté யின் காட்டன் ப்ரா'க்கள் இளம் பெண்கள் முதல், முதிர்ந்தவர்கள் வரையான பன்முக பெண்களுக்கு ஏற்ற வகையில் பின்வருமாறு விரிவான வகையில் உருவாக்கப்பட்டுள்ளன

படேட் மற்றும் வயர் செய்யப்பட்டவை

படேட் மற்றும் வயர்ட் செய்யப்பட்ட ப்ரா'க்கள் புஷ்-அப் மற்றும் மென்மையான லைனிங் என பல்வேறு வகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. புஷ்-அப் ப்ரா'க்கள் இயற்கையான எழுச்சியினை பருத்தி படேட் ஊடாக அளிக்கின்றன. மென்மையாக லைனிங் செய்யப்பட்ட ப்ரா'க்கள் நாளாந்த பாவனைக்கு உகந்த டீ-ஷேர்ட் ப்ரா'க்களாக விளங்குகின்றன

Cotton Push Up Bras

காட்டன் புஷ்-அப் ப்ரா'க்கள் சௌகர்யம் மற்றும் நளினம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக விளங்குகின்றன. இதன் இயல்பான எழுச்சியானது, முழுமையான வசீகரத்தினை அளிக்கின்றது. இதன் ஆழ்ந்த சரிவானது, ஆழமான வெட்டுக்கொண்ட ஆடைகளுக்கும் நேர்த்தியான தோற்றத்தினை அளிக்கின்றது

படேட் மற்றும் வயர் செய்யப்பட்ட ப்ரா'க்கள் முழுமையான மற்றும் நடுத்தர கவரேஜ் இனை நாளாந்த பாவனைக்கு அளிக்கின்றது. இதன் பன்முகத்தன்மை மிகுந்த அகற்றக்கூடிய ஸ்ட்ரேப்கள், துல்லியமான racerback மற்றும் halter tops களுக்கு பொருத்தமானவை

படேட் மற்றும் வயர் செய்யப்பட்ட ஸ்ட்ராப்லெஸ் ப்ரா'க்கள் ஒவ்வொரு பெண்களிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ப்ரா ஆகும். ஆறு வகையான ஸ்ட்ராப் ஸ்டைலுடன் கிடைக்கும் இது, பன்முகத்தன்மை மிகுந்த சௌகர்யமான, ஆதாரமளிக்கும் silhouette உடன், நாளாந்த மற்றும் விசேட நிகழ்வுகளுக்கு அணிய உகந்தது. ஸ்ட்ராப்லெஸ் ப்ரா ஆனது, சிலிக்கன் லைனிங் உடன் கிடைப்பதனால், சிறந்த ஆதரவு மற்றும் நேர்த்தியை அளிக்கும்

வயர் மற்றும் படேட் செய்யப்படாத பிராக்கள்

படேட் மற்றும் வயர் அற்ற ப்ரா'க்கள், படேட் அற்ற மற்றும் வயர் அற்ற ப்ரா'க்கள்  அதி உச்ச சௌகர்யத்தினை அளிக்கும் வாடிக்கையாளர் மத்தியில் பிரபலம் பெற்ற ஸ்டைலாக விளங்குகின்றது. இதன் மென்மையான துணிவகையானது, மார்பகங்களுக்கு நெருக்கமாக பொருந்தி, சௌகர்யமான, நேர்த்தியான வடிவமைப்பை அளிக்கின்றது. இந்த ப்ரா'க்கள் அத்தியாவசியமான வர்ணங்களான உடல் நிறம், வெண்மை ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.

cotton non wired bras

BFF தொகுப்பில்  இல் கிடைக்கும் காட்டன் வயர் அற்ற ப்ரா'க்கள் இளம் பெண்களுக்கு பொருத்தமானவையாகும். இதன் படேட் மற்றும் வயர் அற்ற டெமி-கப் ப்ரா, சௌகர்யமான cotton marl துணியினால் அமைந்துள்ளதனால், நாளாந்த பாவனைக்கு மிக உகந்தது.

cotton sports bras

 ஸ்ட்ரெச் வகை பருத்தி மோல்ட்களில் கிடைப்பதனால், வியர்வையை உறுஞ்சி, ஈரப்பதத்தினை ஒழுங்கமைத்து, உடற்பயிற்சிக்கான வசதியினை அளிக்கின்றது. இந்த சௌகர்யமான படேட் அற்ற, வயர் அற்ற ப்ரா ஆனது, மத்திம தாக்கமளிக்கும் விளையாட்டுகளின் போது அணிய பொருத்தமானது 

cotton non wired bras

 காட்டன் படேட் மற்றும் வயர் அற்ற ப்ரா'க்கள் மத்திம மற்றும் முழுமையான கவரேஜ் இனை அளிக்கின்றன. இந்த மென்மையான துணியானது, உங்கள் சருமத்திற்கு காற்றோட்டத்தினை அளித்து, நாள் முழுவதும் சௌகர்யமிகு ஆதாரத்தினை அளிக்கின்றது. இதன் அகலமான விங், வயர் அற்ற ப்ரா'க்கள், பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கு பொருத்தமானது

எங்கள் காட்டன் ப்ராக்கள் குறித்த உங்கள் விமர்சனங்களை தெரிவியுங்கள்

இந்த ப்ரா பணத்திற்கு மிகுந்த பெறுமதிவாய்ந்தது. இது மிகுந்த சௌகர்யத்தை அளிப்பதுடன், மென்மையான துணி கொண்டது என்பதனாலேயே எனக்கு இதனை மிகவும் பிடித்திருக்கின்றது. 

ஷனா, காட்டன் வயர் செய்யப்பட்ட மற்றும் வயர் அற்ற பேட் செய்யப்பட்ட ப்ரா

இந்த ப்ரா அணிந்திருப்பது தரும் உணர்வு மிகவும் பிடித்திருக்கின்றது. மிகுந்த இலகுத்தன்மையை இந்த ப்ரா அளிக்கிறது. இனிமேல் வேறு எந்த வர்த்தக நாமத்தினையும் நான் உபயோகிக்கப்போவதில்லை. இந்த ப்ரா எந்தவொரு சங்கடத்தினையும் எனக்கு அளிப்பதில்லை. நன்றி. இனி எனது தெரிவு எப்போதும் amanté தான். 

Di,  காட்டன் கேஷூவல்ஸ் வயர் செய்யப்பட்ட ப்ரா

இந்த காட்டன் கேஷூவல்ஸ் பற்றிய அனைத்து அம்சங்களையும்  நான் விரும்புகின்றேன். சரியான வகையில் உடலுடன் பொருந்தும் இது ஒவ்வொரு நாளும், தினசரி  அணியும் வகையிலான இலகுத்தன்மையினை அளிக்கின்றது. இதன் நிறங்கள் மற்றும் ப்ரின்ட்கள் ஆகியவற்றை நான் மிக விரும்புகின்றேன்

சிஷினி, காட்டன் கேஷூவல்ஸ் வயர் மற்றும் வயர் அற்ற ப்ரா

நாளாந்தம் அணியும் வகையில் மிகுந்த சௌகர்யமானது 

 

ப்யூமி, காட்டன்  வயர் மற்றும் வயர் அற்ற ப்ரா

மிகச்சிறந்த வகையில் உடலுடன் அழகாக பொருந்துகின்றது

ஜானகி , கூல் Contour ப்ரா

வெப்பமான நாட்களிலும் அணிவதற்கு மிகப்பொருத்தமானது

உபேக்கா, சிஷினி, காட்டன் கேஷூவல்ஸ் ப்ரின்டட் வயர் மற்றும் வயர் அற்ற ப்ரா


பேண்டீகள்  

சில உள்ளாடைகள் பொதிகளில் விற்கப்படும் போது மிகச்சிறந்த உணர்வை அளிக்கின்றது. amanté காட்டன் பேண்டீகளும் இவ்வாறே பொதியினை திறந்து, அணியும் வேளையில் எண்ணற்ற மகிழ்ச்சியினை அளிக்கின்றன. சௌகர்யம், ஸ்டைல், அழகு என எல்லாம் அடங்கிய இந்த பேண்டீகளை அணிந்து மகிழுங்கள். amanté காட்டன்  பேண்டீகள் , நாளாந்த பாவனைக்கு உகந்த வகையில் பளிச்சிடும் மற்றும் க்ளாசிக் வர்ணங்களில் கிடைக்கின்றன. எமது பேண்டீகள் பிகினி கட், ஹிப்ஸ்ட்டர், போய்ஷோர்ட் என பல்வேறு வடிவங்களில் உச்ச சௌகர்யத்தை உங்களுக்கு அளிக்கும் வகையில் பல பாணிகளில் கிடைக்கின்றன.

amante cotton panties

காட்டன் போய்ஷோர்ட் பேண்டீகள் மெல்லிய பருத்தி இழைகளால் உருவாக்கப்பட்டுள்ளதுடன், உடலின் வளைவுளை மென்மையாக பற்றிப்பிடிக்கின்றன. இந்த பேண்டீகள் உச்ச சௌகர்யத்துடன் போதியளவு மறைத்தலை அளிக்கின்றன

amante cotton panties

ஹிப்ஸ்டர் காட்டன் பேண்டீகள்  ஸ்ட்ரெட்ச் வகையான துணியினால் உருவாக்கப்பட்டுள்ளதால், வெப்பமான நாட்களிலும் சௌகர்யத்தினையும், உடலுக்கு காற்றோட்டத்தினையும் அளிக்கின்றது. ஆழ்ந்த வெட்டப்பட்ட துணிவகையானது, பேண்டீகள் வெளிப்பார்வைக்கு புலப்படாத தன்மையினை அளிக்கின்றது

amante cotton bikini panties

பிகினி காட்டன் பேண்டீகள் எமது silhouette வகையிலான அதிக விற்பனையாகும் பேண்டீயாகும். மெல்லிய மற்றும் தடித்த வெயிஸ்ட் பேன்ட்களுடன் கிடைக்கும் இந்த பேண்டீகளை பல்வேறு நிறங்களில் பெற்றுக்கொள்ள முடியும். மேனியில் மிருதுவாக படரும் இதன் துணியும், கால்களை மென்மையாய் கௌவிப்பிடிக்கும் மெல்லிய எலாஸ்டிக்கும் வெளிப்புறமாக இதனை காண முடியாத தோற்றத்தினை தருகின்றது

எங்கள் காட்டன் பேண்டீகள் குறித்த உங்கள் விமர்சனங்களை தெரிவியுங்கள்

மிகச்சிறந்த தரம்! மென்மையான உணர்வு! அழகிய தோற்றம்! அதி சௌகர்யமிகுந்த துணியிழை, எந்தவொரு வெட்டுகளோ, காயங்களோ தராது

பெயர் வெளியிட விரும்பாதவர் , 3 காட்டன் பிகினி பேண்டீகள்  

வர்ணமயமான தொகுப்பு! amanté காட்டன் சேர்க்கப்பட்ட பிகினி ப்ரீஃப்கள், உங்கள் உள்ளாடைத்தொகுப்பிற்கு மேலும் வண்ணங்களை சேர்ப்பதுடன், மென்மையும், சௌகர்யமும் மிகுந்தவை

மிஹிரி, 3 காட்டன் சேர்க்கப்பட்ட கலர் பிகினி ப்ரீஃப்கள்

எனக்கென பொருத்தமான உள்ளாடை வர்த்தகநாமம் ஒன்றினை தேடிக்கொண்டிருந்தேன். நான் அதை இனிமேலும் தேடவேண்டியதில்லை. நான் கொள்வனவு செய்த பொருட்கள் பற்றி சொல்வதென்றால், நான் பார்த்தவற்றில், உள்ளாடைத்தொகுப்பில் மிகச்சிறந்த தரம்கொண்டவையாகும். அணிந்திருப்பதே தெரியாத வகையில் கண்ணுக்கு புலப்படாது என்பதுடன், அணிய மிகுந்த சௌகர்யமானது.

நவநாகரீகமும் சௌகர்யமும் மிக்கவை!  மெல்லிய பேன்ட் பேண்டீகளை ப்ராவுடன் இணைத்து வேலை நேரங்களில் பயன்படுத்துனிக்றேன். பிகினி ப்ரீஃப்கள் நான் ஜீன்ஸ் அணியும் போது மெல்லிய பேன்ட் கொண்ட பேன்ரீக்களை விட பொருத்தமாக விளங்குகின்றன

எஸ்தர் ஏ, 3 காட்டன் பிகினி பேண்டீ

அனைத்து தயாரிப்புகளும் அதிசிறந்தவை. எந்த நேரத்திலும் அணியத் தகுந்தவை

லோச்சனா – பருத்தி கேஷூவல் பிகினி பேண்டீ

ஏறத்தாள எவ்வித புலப்படும் வரிகளும் தெரியாது என்பதால், நீண்ட அலுவலக நேரங்களுக்கு அணிந்திருக்க பொருத்தமானது! மிகுந்த சௌகர்யமிகுந்தது.

கிம்ஹார, காட்டன் சேர்ந்த ஹிப்ஸ்டர் பேண்டீகள்

கிடைக்கும் தன்மை

  amanté காட்டன் உள்ளாடைத்தொகுப்பினை எமது அனைத்து விற்பனை ஊடகங்களின் ஊடாகவும் பெற்றுக்கொள்ளலாம் 

  1. amanté பொட்டீக்குகள் : ரேஸ் கோர்ஸ் மோல் (கொழும்பு 7) மற்றும் KCC (கண்டி)
  2.  (அனைத்து ஒன்லைன் கொள்வனவுகளுக்கும், ரூ. 1000 ற்கு மேலான ஓடர்களாயின், நாடளாhவிய ரீதியிலான இலவச விநியோகத்தினை நாம் மேற்கொள்கின்றோம். அத்துடன் கொடுப்பனவு முறைகளும், எந்தவித கேள்வியுமற்ற மீள பெற்றுக்கொள்ளும் கோட்பாட்டினையும் கொண்டுள்ளோம்!)
  3. நாடளாவிய சில்லறை விற்பனையாளர்கள்:
  • அம்பலாங்கொட - ASB Group
  • பம்பலப்பிட்டி - Roma Four
  • பத்தரமுல்ல - Ideal Exclusive, RV Fashion
  • கொழும்பு 02 - ODEL
  • கொழும்பு 03 -  Fashion Bug, Kandy (Liberty Plaza), Silk & Satin (Liberty Plaza)
  • கொழும்பு 04 - Beverly Street, CFUK, Double XL
  • கொழும்பு 05 - Cool Planet, The Factory Outlet
  • கொழும்பு 07 - Cotton Collection
  • தெகிவளை - NOLIMIT
  • கம்பஹா - Opelma
  • ஹோமாகம - Prasad Textiles
  • ஹைட்பார்க் - Glitz
  • ஜா-எல  The Factory Outlet, RV Fashion, Thilakawardhana Group
  • கடவத்தை - Kandy
  • களுத்துறை – ASB Group
  • கந்தானை  - RV Fashion
  • கண்டி - Cool Planet, Cool Planet - Much More, Fashion Bug, NOLIMIT, OLIVE
  • கட்டுபெத்த - Fashion Bug
  • கேகாலை - Sriyani Dress Point
  • கிரிபத்கொட - Blinc Mart, Thilikawardhana Group
  • கொகுவல – Maxmara
  • கொஸ்வத்தை - Hi Life, REECHILLIE
  • கொட்டாஞ்சேனை - Zusi
  • குருநாகலை - Andhum Andhum, Fashion Bug, NOLIMIT, Sriyani Dress Point
  • மகரகம - Fashion Bug, NOLIMIT
  • மாலபே - ASB Group, Cool Planet
  • மாத்தறை - Dressmo, Kutuwe Kade, Samanmal
  • மொரட்டுவ - Domingo's
  • மவுன்ட்லவேணியா - Glitz, The Factory Outlet
  • நீர்கொழும்பு - Glitz, Hamaa, NOLIMIT
  • நுகேகொட - Cool Planet, Dressmo, NOLIMIT, Spring & Summer, Vol Square, Giltz (7th MP)
  • பாணந்துறை - ASB Group, NOLIMIT, Samanmal, Spring & Summer, Cool Planet, The Factory Outlet
  • பெலவத்தை - Cool Planet, The Factory Outlet
  • புறக்கோட்டை – Ram Bros
  • பிலியந்தல - Prasad Textiles
  • இராஜகிரிய - Beverly Street, Fashion Bug
  • தலவத்துகொட - ODEL
  • வத்தளை - Cool Planet, Fashion Bug, Kandy, ODEL
  • வெலிசர - Abstract
  • வெள்ளவத்தை - Benzaar, Diliganz, Image, Ranjanas