amanté சாரி ஷேப்பர் ப்ரா

சாரி ஷேப்பர் ப்ரா ஆனது, தெற்காசிய பெண்களைக் கருத்திற்கொண்டு விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீர்க்கமான இந்த ப்ராவின் அம்சங்கள், அணிந்திருப்பவரின் தோற்றத்தினை நேர்த்தியாக எடுத்துக்காட்டுவதுடன், அழகியல் அம்சங்களில் எந்தவித சமரசமுமின்றி, அதிகபட்ச ஆதரவு மற்றும் சௌகர்யத்தினை அளிக்கின்றது.  

சிறப்பம்சங்கள்

மினிமைசர் விளைவு: இந்த ப்ரா ஆனது, உங்கள் மார்பகங்களின் தோற்றத்தினை குறைத்துக்காட்டி, நேர்த்தியாக வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அகன்ற பட்டிகள்: ப்ராவின் அகன்ற பட்டிகள் அதன் கப் அளவுக்கு ஏற்ற விகிதத்தில் அகன்று விளங்குவதால், அணியும் போது தேவையான ஆதரவினையும் சௌகர்யத்தினையும் அணிபவருக்கு தருகின்றது.

அகன்ற விங்க்ஸ்கள்: ப்ராவிலுள்ள விங்க்ஸ்கள், அகன்ற பரிமாணங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அணிபவருக்கு நேர்த்தியான தோற்றத்தினை அளிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. இந்த விங்க்ஸ்கள் தசைகளை உட்புறமாக தள்ளி உங்கள் தோற்றத்தினை மெலிவாக்கி காட்டும்.

அதிமென்மையான பக்க போன்'கள்: விங்க்ஸ் உடன் இணைந்துள்ள பக்க 'போன்'கள் உடலின் பக்கவாட்டுப் பகுதியில் தோன்றக்கூடிய சதைப்பிதுங்கல்களை குறைத்து, ப்ரா  பாதுகாப்பான முறையில் அணிபவரின் உடலுடன் பொருந்தி, கம்பீரமான தோற்றத்தை வழங்க உதவுகின்றது.

.

பக்கவாட்டு ஷேப்பிங் பேனல்: ப்ரா கப்களுடன் இணைந்த இந்த பக்கவாட்டு பேனல்கள் மார்பகங்களின் மிகை அளவினைக் குறைத்து, அழகான தோற்றத்துடன் மிளிரவைக்கின்றது.

டபிள் லைனிங் மற்றும் சென்டர் ப்ரொன்ட் : க்றாடிலில் உள்ள டபிள் லைனிங், பக்கவாட்டு ஷேப்பிங் பேனல் மற்றும் முன்புற மத்தியில் காணப்படும் டபிள் லைனிங் ஆனது பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு மேம்படுத்தப்பட்ட மேலதிக ஆதரவினை அளிப்பதுடன், மூடப்பட்ட சென்டர் ப்ரொன்ட் பகுதியானது, மார்பகங்களை உட்தள்ளுவதற்கு உதவுகின்றது.

இந்த ப்ராவின் அமைப்பானது, மார்பகங்களின் இயற்கையான தோற்றத்துடன் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரா சேலைக்கான ப்ளவுஸ்கள், குர்த்தா போன்ற ஆடைகளுடன் அணிவதற்கு மிகப்பொருத்தமானதாகும். இதன் இயல்பான தோற்றப்பாடு மற்றும் பொருத்தமான இறுக்க அளவு, தேவையற்ற வரிகள் ஆடையில் தோன்றுவதை தவிர்த்து, அணிபவரின் தோற்றத்தினை மெருகேற்றும்.

நிறங்கள் மற்றும் அளவுகள்

சாரி ஷேப்பர் ப்ராவின் புகழுடன், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பல வர்ணங்கள், பல அளவு வகைகளின் கீழ் இவ்வகை ப்ராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் நீங்கள் அணியும் புற ஆடைகளின் நிறங்களுக்கு ஏற்ப உங்களால் உள்ளாடை நிறத்தினை தேர்வுசெய்ய முடியும் என்பதோடு, நேர்த்தியான, கம்பீரமான வெளிப்புறத்தோற்றத்ததினையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 

உற்பத்தி

அனைத்து amanté ப்ராக்களும் MAS ஹோல்டிங்க்ஸ்’ற்குள்ளேயே தயாரிக்கப்படுகின்றன. MAS ஆடை உற்பத்தி தொழிற்துறையில் முன்னோடியாக விளங்குவதுடன், உற்பத்தித்துறையில் பல வருடகால தொழினுட்ப ஆற்றல்மிகு அனுபவத்தையும் கொண்டுள்ளது. MAS ஹோல்டிங்க்ஸ் உலகளாவிய ரீதியிலுள்ள முன்னணி உள்ளாடை  மற்றும் விளையாட்டு ஆடை வர்த்தகநாமங்களுடன் பெறுமதிமிக்க பங்குடமையில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான அனுபவங்கள், நிகரற்ற அனுபவத்தினை கொண்ட உற்பத்தித்துறை சூத்திரதாரியாக நிறுவனம் மாறுவதற்கு கால்கோளாக விளங்கியது. தரமிக்க துணிவகைகள், அதிநவீன உற்பத்தி இயந்திரங்கள், அற்புதமான புத்தாக்கம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட amanté உள்ளாடைகள், MAS வர்த்தக நாமத்தின் கீழ் பெருமையுடன் அமைந்துள்ளது

பாவனையாளர்களின் சான்றுகள்

பாவனையாளர்களின் சான்றுகள் சாரி ஷேப்பர் ப்ரா வினை வடிவமைத்து தயாரிக்கையில், நாம் கையாண்ட அக்கறையினை வெளிப்படுத்துகின்றது. இதோ எமது பாவனையாளர்கள் எம் தயாரிப்பு குறித்து தெரிவிக்கும் கருத்துகள்!

கச்சிதமாக பொருந்தும்அளவுடன் கூடிய மிகச்சிறந்த தயாரிப்பு.

கார்த்திகா. எல்

சாரி ஷேப்பர் ப்ரா மிகச்சிறந்த பொருத்தத்தினை அட்டவணையிலுள்ளபடி அளிக்கின்றது. அதன் துணியும் மிக நல்லது.

ரோஸ்மேரி

பக்கவாட்டு பகுதிகள் நேர்த்தியாக பொருந்துகின்றன. துணியும் மிகுந்த சௌகர்யம் அளிக்கின்றது.

ருவினி

மேலாடைகளுக்கு மேலே எந்த வெளிப்படுத்தல்களும் நேர்வதில்லை. ஆசிரியரான எனக்கு, எனது சேலைக்கு மிகப்பொருத்தமான தேர்வாகும்

கல்ப்பனி

பல வர்ணங்களில் இந்த தயாரிப்பு கிடைப்பதனால், எனது டொப்களுக்கு மிகப்பொருத்தமானதாக விளங்குகின்றது.

ஹன்சி

எனது சேலைகளுடன் ஒத்துப்போகும் மிகச்சிறந்த ப்ராவாகும். நீண்ட நேரம்  அணிந்திருப்பதற்கும் சிறந்தது.

ரஞ்சனி

எங்கு வாங்கலாம்?

amanté சாரி ஷேப்பர் எமது அனைத்து விற்பனை ஊடகங்கள் அனைத்தின் ஊடாகவும் கிடைக்கின்றது.

 1.    amanté  Boutiques:   ரேஸ் கோர்ஸ் மால் ( கொழும்பு - 07) மற்றும் கே.சி.சி (கண்டி)  
 2.  amanté Online:  www.amante.lk    (அனைத்து  ரூ 500ற்கு மேற்பட்ட ஒன்லைன் கொள்வனவுகளுக்கும் நாடளாவிய ரீதியில் இலவச விநியோக சேவையினை நாம் அளிப்பதுடன், பொருட்களை பெற்றுக்கொண்டபின்  பணம் செலுத்தும் விருப்பத்தெரிவினையும் வழங்குகின்றோம். ஒன்லைன் கொள்வனவுகளுக்கு எந்தவொரு கேள்வியுமின்றிய, மீளளித்து, மாற்றிக்கொள்ளும் கோட்பாடு அமுலில் உண்டு).
 3.  நாடளாவிய விற்பனையாளர்கள்:
 •   அம்பலாங்கொடை  - ASB Group
 •   பம்பலபிட்டி  - Roma Four
 •   பத்தரமுல்ல - Ideal Exclusive, RV Fashion
 •   கொழும்பு 2 - ODEL
 •   கொழும்பு 3 -  - Fashion Bug, Kandy (Liberty Plaza), Silk & Satin (Liberty Plaza)
 •   கொழும்பு 4 - Beverly Street, CFUK, Double XL
 •   கொழும்பு 5 - Cool Planet, The Factory Outlet
 •   கொழும்பு 7 - Cotton Collection
 •   தெஹிவல - NOLIMIT
 •   கம்பஹா - Opelma
 •   ஹோமாகம - Prasad Textiles
 •   ஹைட் பார்க் - Glitz
 •   ஜா-எல -  The Factory Outlet, RV Fashion, Thilakawardhana Group
 •   கடவத்தை - Kandy
 •   களுத்துறை - ASB Group
 •   கந்தானை - RV Fashion
 •   கண்டி - Cool Planet, Cool Planet - Much More, Fashion Bug, NOLIMIT, OLIVE
 •   கட்டுபத்த - Fashion Bug
 •   கேகாலை - Sriyani Dress Point
 •   கிரிபத்கொடை - Blinc Mart, Thilikawardhana Group
 •   கொஹுவல - Maxmara
 •   கொஸ்வத்தை - Hi Life, REECHILLIE
 •   கொட்டாஞ்சேனை - Zusi
 •   குருநாகலை - Andhum Andhum, Fashion Bug, NOLIMIT, Sriyani Dress Point
 •   மஹரகம - Fashion Bug, NOLIMIT
 •   மாலபே - ASB Group, Cool Planet
 •   மாத்தறை - Dressmo, Kutuwe Kade, Samanmal
 •   மொரட்டுவ - Domingo's
 •   கல்கிசை - Glitz, The Factory Outlet
 •   நீர்கொழும்பு - Glitz, Hamaa, NOLIMIT
 •   நுகேகொடை -  Cool Planet, Dressmo, NOLIMIT, Spring & Summer, Vol Square, Giltz (7th MP)
 •   பாணந்துறை - ASB Group, NOLIMIT, Samanmal, Spring & Summer, Cool Planet, The Factory Outlet
 •   பெலவத்த - Cool Planet, The Factory Outlet
 •   புறக்கோட்டை - Ram Bros
 •   பிலியந்தலை - Prasad Textiles
 •   ராஜகிரிய -  Beverly Street, Fashion Bug
 •   தலவத்துகொட - ODEL
 •   வத்தளை - Cool Planet, Fashion Bug, Kandy, ODEL
 •   வெலிசர - Abstract
 •   வெள்ளவத்தை - Benzaar, Diliganz, Image, Ranjanas

இப்போது வாங்க!